ஆவடி அருகே இரு ரயில்கள் மோதல்;புறநகர் ரயில்கள் ரத்து: பயணிகள் அவதி!

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற விரைவு ரயில், மின்சார ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 6 பெட்டிகள் தடம்புரண்டன. இதில் 10 பேர் காயமடைந்தனர்.

trainac

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து பட்டாபிராம் சைடிங் ரயில் நிலையம் நோக்கி, மின்சார ரயில் ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. பட்டாபிராம் சைடிங் ரயில் நிலையத்திற்கு செல்வதற்காக ஓட்டுநர், மின்சார ரயிலை விரைவு ரயில் செல்லும் தண்டவாளத்தில் செலுத்தினார்.

அப்போது அதே தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த சென்னை-திருவனந்தபுரம் விரைவு ரயில் உடடினயாக நிறுத்தப்பட்டது. இதில், மின்சார ரயில் மீது விரைவு ரயில் உரசியதில், இரண்டு ரயில்களிலும் இருந்த 6 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தகவலறிந்து வந்த 135 பேர் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினர். இரவு முழுவதும் நீடித்த மீட்பு பணியில் முடிவில், தடம்புரண்ட பெட்டிகள் அகற்றப்பட்டன. ரயில் தடம் புரண்ட விபத்தால், 10 மணி நேரத்துக்கும் மேலாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

இந்த விபத்தால், விரைவு ரயில் 6 மணி நேரத்துக்கும் மேலாக பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாயினர். ரயில்வே நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என்றும் பயணிகள் குற்றம்சாட்டினர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top