சோனியாவுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்

 

20160505045403 (6)2009ஆம் ஆண்டு தமிழ் இனப்படுகொலைக்கு துணை நின்றதால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தமிழகம் வரும் போதெல்லாம் பெரும் எதிர்ப்பை சந்திக்கிறார்கள்.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் திமுக வினரை ஆதரித்து இன்று மாலை தீவுத்திடலில் நடைபெறும் பொது கூட்ட த்தில் கருணாநிதிமற்றும் சோனியா காந்தி ஆகியோர் பேசுகின்றனர் இந்த கூ ட்டத்தில் கலந்துகொள்ள தமிழகம் வரும் சோனியா காந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்க கருப்பு கொடி காட்டப்பட்டது இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் தமிழர் விடியல் கட்சி மே 17 இயக்கம் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர் .

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காங்கிரஸ் மற்றும் திமுக விற்கு எதிராக முழக்கம் எழுப்பினர் மேலும் தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு என்றும் காங்கிரசும் சோனியாவும் இந்திய அரசும் இனப்படு கொலையின் கூட்டு குற்றவாளிகள் என்றும் முழக்கமிட்டனர் அவர்களை காவல் துறை கைது செய்துள்ளது

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top