மீண்டும் ஒரு தலித் மாணவி மீது பாலியல் வன்கொடுமை

30838_S_violencewomenA

தலித் சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது நாடெங்கும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், கேரளாவில் மற்றொரு தலித் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்துக்கு அருகே உள்ள அனயரா பகுதியைச் சேர்ந்த 2-ம் ஆண்டு நர்சிங் படித்து வரும், பத்தொன்பதே வயதான தலித் மாணவி வைஷ்ணவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கொல்லத்தில் உள்ள அவரது காதலனை பார்த்து விட்டு, நேற்று முன்தினம் இரவு சொந்த ஊருக்கு திரும்பி இருக்கிறார்.

அப்போது அவருடன் வந்த அவரது காதலன், தனது நண்பர்கள் 3 பேர் மற்றும் ஒரு ஆட்டோ டிரைவருடன் சேர்ந்து, வர்க்கலை அருகே உள்ள அயந்தி பகுதிக்கு அந்தப்பெண்ணை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். பின்னர் அந்தப்பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

சிறிது நேரத்துக்குப்பின் அந்த பகுதியில் ஆட்டோ ஒன்று அனாதையாக நின்றதை கண்ட அப்பகுதியினர் அங்கே சென்று பார்த்த போது, இளம்பெண் வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததைக் கண்டு உடனே அந்தப் பெண்ணை மீட்டு திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து இளம்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top