ஹெலிகாப்டர் பேர ஊழல் விமான படை முன்னாள் தளபதியிடம் சி.பி.ஐ. 2-வது நாளாக விசாரணை

201605031338099851_CBI-2nd-day-investigation-former-IAF-chief-SP-Tyagi_SECVPFஅகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு தொடர்பாக இந்திய விமானப்படை முன்னாள் தளபதி தியாகியிடம் இன்று 2-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர்களுக்காக ஹெலிகாப்டர் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.

12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்க ரூ. 3600 கோடிக்கு ஒப்பந்தம் ஆனது. இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக இந்தியாவில் உள்ளவர்களுக்கு இத்தாலி நிறுவனம் ரூ. 360 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக 2013-ம் ஆண்டு சி.பி.ஐ. விசாரணை நடத்தி விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகி, அவரது உறவினர்கள், ஐரோப்பிய இடைதரகர்கள் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது. இதை தொடர்ந்து இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

இந்த ஊழல் தொடர்பாக இத்தாலியின் மிலன் நகரில் உள்ள மேல்முறையீட்டு நீதி மன்றத்தில் சமீபத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதில் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை பெறுவதற்கு எவ்வாறு லஞ்சம் கொடுத்தன என்பது தொடர்பான தகவல்கள் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தீர்ப்பின் பல்வேறு இடங்களிலும் எஸ்.பி. தியாகியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து சி.பி.ஐ. தனது விசாரணையை மீண்டும் தொடங்கியது. ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பாக விமானப்படை முன்னாள் துணை தளபதி ஜே.எஸ்.குஜ்ராலிடம் சி.பி.ஐ. கடந்த சனிக்கிழமை விசாரணை நடத்தியது.

இதே போல விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகியிடம் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். சுமார் 10 மணி நேரம் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இன்று 2-வது நாளாக தியாகியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்கு பிறகு அவர் பல முறை இத்தாலி சென்று வந்தது பற்றி அதிகாரிகள் விசாரணை செய்தனர்.

ஹெலிகாப்டர் பேர ஊழல் தொடர்பாக அமலாக்க துறையும் விசாரணை நடத்தி வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள சில நிறுவனங்களுக்கு இதில் தொடர்பு இருப்பது பற்றி விசாரணை நடைபெறுகிறது.

இது தொடர்பாக எஸ்.பி. தியாகிக்கு ஏற்கனவே அமலாக்க துறை சம்மன் அனுப்பி இருந்தது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தியாகியின் உறவினர் சஞ்சீவ் தியாகிக்கு அமலாக்க துறை இன்று சம்மன் அனுப்பி உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top