டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணிக்கு இரண்டாவது இடம்: ஆஸ்திரேலியா முதலிடம்

201605031652365490_Australia-lead-Test-team-rankings-India-placed-second_SECVPF2015-16 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது. அதில், ஆஸ்திரேலியா அணி 118 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி 32 போட்டிகளில் விளையாடியுள்ளது. ஒரு நாள் போட்டிக்கான அணியிலும் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது.

20 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 112 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. டி 20 போட்டிகளில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.

டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவிற்கு அடுத்தப்படியாக பாகிஸ்தான்(111), இங்கிலாந்து(105), நியூசிலாந்து(98) அணிகள் முறையே 3-வது, 4-வது மற்றும் 5-வது இடங்களை பிடித்துள்ளன.

தென் ஆப்பிரிக்க அணி 92 புள்ளிகளுடன் மூன்று இடங்கள் பின்தங்கி தற்போது 6-வது இடத்தில் உள்ளது. இலங்கை அணி 88 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top