மருத்துவ நுழைவுத்தேர்வை நடத்தும் பொறுப்பை மாநிலங்களிடமே ஒப்படைக்கக் கோரி மனுக்கள்:உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

supreme

அகில இந்திய அளவில் மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடப்பாண்டிலேயே நடத்த வேண்டும். என உச்ச நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மாணவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்தது. இதனடிப்படையில் முதல் கட்ட நுழைவுத்தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.இந்நிலையில், மருத்துவ நுழைவுத்தேர்வை நடத்தும் பொறுப்பை மாநிலங்களிடமே ஒப்படைக்கக் கோரி, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஆந்திரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. ஏற்கனவே, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் நுழைவுத் தேர்வை எதிர்த்து தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான விசாரணை, 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்னிலையில், இன்று விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இன்றைய விசாரணையிலேயே, புதிதாக சில மாநிலங்கள் தாக்கல் செய்துள்ள மனுக்களும் ஒன்றாக விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.இதற்கிடையே, மத்திய பிரதேசத்தில் தனியார் பல் மருத்துவக் கல்லூரில் 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்கீடு செய்யும் சட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து நேற்று உத்தரவிட்டுள்ளது.மேலும், இந்த இட ஒதுக்கீடு விவகாரங்களை கண்காணிக்க, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் 3 பேர் கொண்ட குழுவையும் உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. இதில் முன்னாள் சிஏஜி வினோத்ராய் மற்றும் ஷிவ்வரின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழு அடுத்த ஓராண்டுக்கு மத்திய பிரதேச தனியார் பல் மருத்துவக் கல்லூரி இடஒதுக்கீடு விவகாரங்களை கண்காணிக்கும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top