மரபணு மாற்று பயிர்களுக்கு ஹங்கேரியில் தடை

GMO
உலகம் முழுவதும் தற்போது மரபணு மாற்று பயிர்களுக்கு எதிரான மிகப்பெரிய விவாதங்கள் உருவாகியுள்ளது. இதை தொடர்ந்து சில அரசுகள் மரபணு மாற்று பயிர்களின் பயன்பாட்டினை ரத்து செய்ய தொடங்கியுள்ளன. தற்போது மரபணு மாற்று விதைக்கு எதிராக மிக  உறுதியான  நிலைபாட்டினை  ஹங்கேரி நாடு எடுத்துள்ளது. ஹங்கேரி நாட்டில்  மரபணு  மாற்று பயிர்கள் அரசே தீயிட்டு எரித்துள்ளது. ஆயிரம்  ஏக்கருக்கு  அதிகமாக  பயிர்களை  அவர்கள் தீயிட்டு அழித்துள்ளனர்.
 
இது மான்சாண்டோ நிறுவனத்துக்கும், விதை வணிகத்தில் உள்ள பெருநிறுவனங்களுக்கும்  எதிரான  மிக முக்கியமான நிகழ்வாகும். ஏற்கனவே லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ‘பெரு’ நாடு பத்து ஆண்டுகள்  மரபணு மாற்று விதைக்கு தடை போட்டு இருப்பது குறிப்பிடத் தக்கது.
 
பல ஐரோப்பிய  நாடுகள் இதை  விரும்பாத போதும் இந்த துணிச்சலான முடிவை ஹங்கேரி நாடு முடிவெடுத்துள்ளது. மேலும்  வணிகர்கள்  மரபணு மாற்று  பொருட்களை விற்பனை செய்வதும் தடை செய்யப்படுள்ளதால் அதனை கண்காணிக்க குழுவும் அமைக்கப்படுள்ளது.இதனை அந்நாட்டின் ஊரக வாளர்ச்சி இணை செயலாளர் தெரிவித்துள்ளார்.
 
ஆனால்  இந்தியாவில் அமைச்சர்  ஜவடேக்கர்  மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் உணவு பாதுகாப்பிற்கு உதவிடும் வகையில் இருக்கும் என்று    பேட்டி கொடுத்தது  குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களை பகிர


அல்லது

One comment

  1. தங்களுடைய செய்தி மிகவும் பயன் உள்ளதாய் உள்ளது

Your email address will not be published.

Scroll To Top