இயக்குனர் சீமான் உருவ பொம்மை எரிக்க முயன்றவர்கள் கைது

fgfg

கண்டி நாயக்கர் ஆவணப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இன்று சென்னை சிம்சனில் இயக்குனர் சீமானின் உருவபொம்மையை எரிக்க முயன்றவர்கள், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில், கண்டி நாயக்கர் என்ற பெயரில் ஒரு ஆவணப்படம் வெளியிடப்பட்டது. அதில் ஈழ தமிழர் வரலாற்றையும், விடுதலை போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவதாகவும், மேலும் தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்களிடம் பிரிவினையை ஏற்படுத்தும்  வண்ணம்  இருப்பதாகவும் கூறி அந்தப்படத்திற்கு  எதிர்ப்பு பெருகியது. கடந்த வாரம் கோவை மற்றும் சீர்காழியில்  சீமானின்  உருவபொம்மைகள்  எரிக்கபட்டன.

அதே போல இன்று சென்னை சிம்சனில் உள்ள பெரியார் சிலை அருகே தமிழர்  விடியல் கட்சி, தந்தை பெரியார் திராவிட கழகம் உள்ளிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள், இயக்குனர் சீமானின் உருவபொம்மையை எரிக்க முயன்ற போது, காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். தற்போது அவர்கள் சிந்தாரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்படுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top