முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே நகரில் 45 பேர் போட்டி!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

maxresdefault

தமிழகத்தில் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளிலும், ஏப்., 22ம் தேதி, வேட்பு மனு தாக்கல் துவங்கியது. ஏப்., 29ம் தேதி நிறைவு பெற்றது. நான்கு திருநங்கையர், 794 பெண்கள், 6,358 ஆண்கள் என, மொத்தம், 7,156 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் வேட்பு மனுக்கள் தேர்தல் ஆணையத்தால்பரிசீலனை செய்யப்பட்டன. பரிசீலனையின் போது 2,956 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 4,200 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் இன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. சென்னையில் உள்ள பதினாறு சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 378 பேர் போட்டியிடுகிறார்கள். அதிகபட்சமாக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே நகரில்  45 பேரும், ஸ்டாலின் போட்டியிடும் கொளத்துர் தொகுதியில் 24 வேட்பாளர்களும், பெரம்பூர் தொகுதியல் 33 வேட்பாளர்களும், மயிலாப்பூர் மற்றும் வேளச்சேரி தொகுதிகளில் தலா 25 பெரும் போட்டியிடுகிறார்கள். குறைந்தபட்சமாக வில்லிவாக்கம் மற்றும் ராயாபுரம் தொகுதிகளில் தலா 17 பேர் போட்டியிடுகின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top