புதுச்சேரியில் தேமுதிக வுக்கு முரசு சின்னம் ஒதுக்கப்படவில்லை?

புதுச்சேரியில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு முரசு சின்னம் ஒதுக்கப்படவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

dmdkநடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், புதுச்சேரியில் மொத்தம் உள்ள முப்பது தொகுதிகளில் புதுச்சேரி மாவட்டத்தில் 372 பேர், காரைக்கால் மாவட்டத்தில் 52 வேட்பாளர்கள் என மொத்தம் 424 பேர் புதுச்சேரியில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து இருந்தனர். காரைக்காலில் 12 பேர் தேசிய கட்சிகளையும், 17 பேர் அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகள், 11 பேர் அங்கீகரிக்கப்படாத கட்சிகள், 12 பேர் சுயேச்சைகளாகவும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட இருந்த நிலையில் தே.மு.தி.க விற்கு புதுச்சேரியில் முரசு சின்னம் ஒதுக்கப்படவில்லை என்று தெரிகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் முரசு சின்னம் ஒதுக்கக்கோரி எந்த மனுவும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்படவில்லை என்பது காரணமாக சொல்லப்படுகிறது. மக்கள் நலக்கூட்டணி உடன் கூட்டணியில் இருக்கும் தே.மு.தி.க புதுச்சேரியில் ஆறு இடங்களில் போட்டியிடுவதாக இருந்தது என்பது குறிப்பிடப்படவேண்டியது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top