ஆந்திராவில் கட்சி தாவிய 16 எம்எல்ஏ.க்கள் பதவியை ரத்து செய்ய சபாநாயகரிடம் மனு

201605011229409003_YSR-Congress-petition-to-AP-speaker-over_SECVPFஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பல எம்.எல்.ஏக்கள் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து உள்ளனர். இதுவரை 16 எம்.எல்.ஏக்கள் கட்சி தாவி இருக்கிறார்கள்.

கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அவர்களின் பதவியை பறிக்க ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்கனவே மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் கவர்னர் நரசிம்மனை ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்து புகார் மனு அளித்தார்.

இந்த நிலையில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் லிங்கேஸ்வர ரெட்டி, ராஜேந்திர நாத் ஆகியோர் சபாநாயகர் கோடல சிவபிரசாத் ராவை சந்தித்து புதிய மனு கொடுத்தனர். அதில், ‘கட்சி தாவிய 16 எம்.எல்.ஏக்களின் பதவியை ரத்து செய்ய வேண்டும்‘ என்று கூறியுள்ளனர்.

தங்களது மனுவுடன் கட்சி விலகிய எம்.எல்.ஏக்கள் தாங்கள் தெலுங்குதேசம் கட்சியில் இணையப் போவதாக கூறிய அறிக்கைகள், அவர்களை சந்திரபாபு நாயுடு கட்சியில் சேர்த்துக் கொண்ட போது எடுத்து கொண்ட புகைப்படம் போன்ற ஆதாரங்களை கொடுத்து உள்ளனர்.

பின்னர் அவர்கள் கூறும் போது, ‘ஒரு கட்சி சின்னத்தில் வெற்றி பெற்றவர்களை இன்னொரு கட்சியில் சேர்த்துக் கொள்வது என்பது எச்சில் சோறு சாப்பிடு வதற்கு சமம்.

அவர்களின் பதவியை ராஜினாமா செய்ய சொல்லாமல் தனது கட்சியில் சந்திரபாபு நாயுடு சேர்த்துக் கொள்வது ஜனநாயக விரோத செயல் என்று கூறியுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top