ஹெலிகாப்டர் பேர ஊழல்: பாராளுமன்றத்தில் 4-ம் தேதி முழு ஆவணங்களையும் சமர்பிப்பேன் – ராணுவ மந்திரி அறிவிப்பு

201605011236241908_Chopper-deal-Parrikar-to-place-facts-in-Parliament-on-May-4_SECVPFஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக 2013-ல் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

பின்னர், தியாகி உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்ப்பட்டது. இந்த நிலையில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே, இந்தியர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டது தொடர்பாக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் மீது இத்தாலி கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு இத்தாலி கோர்ட்டு அண்மையில் சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இந்தியர்கள் லஞ்சம் பெற்றதையும் கோர்ட்டு உறுதி செய்தது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. தனது விசாரணையை மீண்டும் தொடங்கி இருக்கிறது. இத்தாலியில் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவதில் லஞ்சம் பெற்றதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது பா.ஜனதா குற்றம்சாட்டி வருகிறது.

இந்த வழக்கில் ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்க தாமதம் ஏன்? லஞ்சம் கொடுத்தவர்கள் மீதும், லஞ்சம் வாங்கியவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுங்கள்,” என்று முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி, கூறியுள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற மேல்சபை அலுவல்கள் அனைத்தும் கடந்த இருநாட்களாக முடங்கின.

இந்நிலையில், அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஒப்பந்தம் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் யார் லஞ்சம் பெற்றார்கள் என்பதை அறிவிக்கவேண்டும் என்று தெரிவிக்கவேண்டும் என்றும் மனோகர் பாரிக்கர் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ”பாராளுமன்றத்தில் மே 4-ம் தேதி, அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஒப்பந்தம் தொடர்பாக உண்மைகள் அடங்கிய அனைத்து ஆவணங்களும் சமர்பிக்கப்படும்,” என்று மனோகர் பாரிக்கர் இன்று அறிவித்து உள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top