தனியாக மருத்துவ நுழைவுத் தேர்வுகளை மாநிலங்கள் நடத்த அனுமதி: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு புதிய மனு

dsd

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., எம்.டி. போன்ற மருத்துவக் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு நடத்தப்பட்டு வந்த நுழைவுத் தேர்வினை ரத்து செய்யக்கோரி பல்வேறு மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 18-ந்தேதி அன்று நுழைவுத்தேர்வுக்குத் தடைவிதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி மத்திய அரசும், இந்திய மருத்துவக் கவுன்சிலும் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தன. இந்தச் சீராய்வு மனுவை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, நுழைவுத்தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டிருக்கிறது. மேலும், இந்த ஆண்டே நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு தமிழக மாணவ-மாணவியரிடையே பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., எம்.டி. போன்ற   என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் இன்று புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது.

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹட்கி தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் மே 1 மற்றும் ஜூலை 24 ஆகிய தேதிகளில் நுழைவுத் தேர்வை இரு தவணைகளாக நடத்துவதற்கு பதிலாக வரும் ஜூலை 24-ம் தேதியன்று ஒரே தவணையாக நடத்தலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நேற்றைய உத்தரவுக்கு முன்னதாக மருத்துவ நுழைவுத் தேர்வுகளை நடத்தியுள்ள மாநிலங்கள் மற்றும் நடத்த திட்டமிட்டுள்ள மாநிலங்கள் தொடர்ந்து இதர நடைமுறைகளை செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top