இயக்குநர் சீமான் உருவ பொம்மை எரிப்பு

இன்று, நாகை மாவட்டம் சீர்காழியில் தமிழர் விடியல் கட்சியினர் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் உருவ பொம்மையை எரித்தனர் இது குறித்து பேசிய  அந்த தமிழர் விடியல் கட்சியினர்

sem22

ஈழ இனப்படுகொலைக்கு எதிராக களம் கண்டதாக சொல்லிக்கொள்ளும் நாம் தமிழர் கட்சி இன்று தடம் புரண்டு ஈழ இனப்படுகொலையின் பங்காளிகளான இந்திய-பார்ப்பனியத்தை பாதுக்காக்கும் வேலையை செய்து வருகிறது.

சிங்கள அரசின் மந்திரியாக இருந்த கோத்தபய ராஜபக்சே “இந்தியாவின் போரைத்தான் நாங்கள நடத்தினோம்” என்று கூறியுள்ளான். சிங்கள மக்களும் ஆரிய இனம் தான் என்று பாஜக-வின் அன்றைய தலைவர் அத்வானி கூறியதை தமிழர்கள் யாரும் மறந்துவிடவில்லை. ராஜீவ் காந்தி காலத்தில் இருந்து இந்திய அரசு ஈழ தமிழர்களை அழிக்கும் வேலையை நேரடியாக செய்து வருகிறது.

seemaanதொடக்கத்தில் கூட்டுத் தலைமையாக இயங்கிய நாம் தமிழர் கட்சி, தனி மனித கட்டுப்பாட்டிற்குள் சென்ற பிறகு இந்திய-பார்ப்பனிய கட்டமைப்பை எதிர்த்து எந்த ஒரு ஆக்கப்பூர்வமான போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. போராடும் சக்திகளிடையே குழப்பத்தையும், பிரிவையும் ஏற்படுத்தம் வேலையையே செய்து வருகிறது. போராட்ட உணர்வுடன் கூடிய இளைஞர்களை மட்டுப்படுத்தியது.

மாறாக, இந்திய-பார்ப்பனிய கட்டமைப்பிலிருந்து தமிழர்களை மீட்க, தமிழகத்தில் வரலாற்று சிறப்பு மிக்க தமிழர் எழுச்சியை நிகழ்த்திக்காட்டிய தந்தை பெரியாரையும், பெரியாரிய இயக்கங்களையும் தொடர்ந்து கொச்சைப்படுத்தி வரும் அயோக்கியத்தனமான அரசியலை செய்து வருகிறது நாம் தமிழர் கட்சி.

80-களின் தொடக்கத்தில் புலிகளின் தலைமையில் ஆயுதப் போராட்டம் வலுப்பெற்ற காலத்திலிருந்து தமிழகத்தில் புலிகளின் அரசியலுக்கு அரணாகவும் இந்திய-சிங்கள கூட்டு இனப்படுகொலையை எதிர்த்து களம் கண்டதும் பெரியாரிய இயக்கங்களை சார்ந்த தோழர்கள்தான். அன்றிலிருந்து இன்று வரை உண்மையான பெரியார் தொண்டர்க்ள் ஈழ விடுதலைக்காக சமரசமற்ற போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

இந்த உண்மைகளையெல்லாம் மறைத்து தமிழர்களை ஆட்டு மந்தை கூட்டமாக நினைத்து தொடர்ச்சியாக பெரியார் மீது அவதூறு பரப்பும் வேலையை நாம் தமிழர் கட்சி செய்துவருகிறது. 2009 இறுதிக்கட்ட போரின்போது, சிங்களவனுக்கு உதவியாக இந்திய அரசு ஆயுதங்கள் அனுப்பிய போது, அந்த ஆயுதங்கள் தாங்கிய இந்திய இராணுவ வண்டிகளை கோவையில் மறித்து அடித்து நொறுக்கினர் பெரியாரிய இயக்கத்தினர். இது தமிழக வரலாற்றில் முதல் இந்திய ராணுவ தாக்குதல் போராட்டமாகும். இது போன்ற எந்த ஒரு போராட்டத்தையும் முன்னெடுக்க அஞ்சுகிற நாம் தமிழர் கட்சி தான் பெரியாரையும், பெரியாரிய இயக்கங்களையும் தமிழர்களுக்கு எதிரியாக சித்தரிக்க முயல்கிறது.

அதன் தொடர்ச்சியாக தற்பொழுது “கண்டி நாயக்கர்” என்ற வரலாற்று திரிவு ஆவணப்படத்தை வெளியிட முற்படுகிறது. முதலில் சிங்களவனை தெலுங்கர் வழி வந்த இனம் என்று ஒரு வரலாற்று திரிவை ஏற்படுத்தி, பின்பு தமிழர்களின் எழுச்சிக்காக, ஈழ விடுதலைக்காக போராடிய, போராடும் ஒரு பகுதியினரை தெலுங்கர் என்ற முத்திரை குத்த முற்படுகிறது. இதன் மூலம் சிங்கள பேரினவாதம் மீதும், பார்பனியத்தின் மீதும் இருக்கும் தமிழர்களின் நியாயமான போராட்ட உணர்வை தவறாக திசைதிருப்புகிறார்கள். சாதிய அடையாளங்களை கடந்து தமிழர்களாக போராடும் மக்களை, ஒரு போலி எதிரியாக கட்டமைத்து, அவர்கள் மீது பாசிச குணம் கொண்ட வெறி உணர்வை பரப்பும் கேவலமான சூழ்ச்சியை முன்னெடுக்கிறார்கள்.

இனவெறியின் உச்சிக்கே சென்று பெரியாரையும் ராஜபக்சேவையும் ஒரே இனம் என பேசும் இழிச் செயலை நாம் தமிழர் கட்சி செய்துள்ளது. சிங்கள-பௌத்த பேரினவாதத்தையோ அதன் பங்காளியான இந்திய-பார்ப்பனியத்தையோ எதிர்க்க துணிவற்று போலியான ஒரு எதிரியை உருவாக்கும் சிவசேனா-ஆர்.எச்.எச் பானி அரசியலை நம்மால் இன்று தெள்ளத்தெளிவாக உணர முடிகிறது. இனவெறி மூலம் உண்மையான எதிரியை பாதுகாத்து தமிழீழ விடுதலை போராட்டத்தை சிதைக்கும் இந்த சூழ்ச்சியை தமிழர்கள் மத்தியில் அம்பலப்படுத்துவது ஈழ விடுதலை போராட்டத்தில் அக்கறை கொண்ட ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்!

 

எனவே

“கண்டி நாயக்கர்” என்ற வரலாற்று திரிவு இனவெறி ஆவணப்படத்தை கண்டித்து சிங்கள கைகூலியான சீமான்  உருவபொம்மை  எரிப்பு போரட்டம் நட்த்துகிறோம்   என கூறினர்

 


கருத்துக்களை பகிர


அல்லது

One comment

 1. Karunanandarajah

  துள்ளிப் பறையடி டா சோராமப் பாய்ஞ்சடி டா
  கள்ளப் பிசாசுங்கள ஓட்ட – சீமான்
  கட்சிவந்து ஆளட்டும் நாட்ட – துள்ளிப்பறை…..
  மண்ணச் சுரண்டிக் கிட்டான் மலையக் கொடைஞ்செடுத்தான்
  என்னத்த விட்டு வச்சான் நாட்டில் – பயக
  எம்ம விட்டான் வெந்து போன காட்டில் – துள்ளிப்பறை….
  நாட்டுக்குள்ள அணு உலைய நட்டுப்பிட்டு சிரிக்கிறான்
  நஞ்சை நிலம் நஞ்சடைய எரிவாயு கடத்துறான்
  கேட்டுக்குள்ள நம்மத்தள்ளுறான் – அம்மா
  கெடந்து சாவு எண்ணு தூங்கிறா..
  கழிவறையக் கட்ட அம்மா கட்சி வந்து தடுக்குது
  எளியதெல்லாம் இடமில்லாம இங்கு மங்கும் அலையது
  துளியளவும் இரக்கமில்லடா – இந்த
  துயரை எங்க போயிச் சொல்லடா
  போதுமடா சாமி இந்தப் பொறுக்கிப்பயக தொல்ல
  தீதையெல்லாம் வெல்ல நாம் திரண்டெழுவோம் மெல்ல
  போடுங்கடா ஓட்டப் போடுங்கடா….
  போடுங்கடா ஓட்டப் போடுங்கடா – துள்ளிப்பறை…
  ரெட்டை மெழுகுவாத்தி நம்ம சின்னம்டா – அதுக்கு
  தேசத்து மக்களெல்லாம் ஓட்டுப் போடுவம் டா
  கெட்ட பயக எல்லாம் ஓடப் போடுவம் டா – இனி
  கேக்க வேணும் நாம் தமிழர் வெற்றி முரசம் டா. – துள்ளிப்பறை

Your email address will not be published.

Scroll To Top