தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்.7 முதல் சீமான் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம்

SEEMANதமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகிற ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மெற்கொள்ள உள்ளார்.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை நிலையச்செயலாளர் சி.தங்கராசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாராளுமன்ற தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரசாரம் செய்ய இருக்கிறார். அவருடைய பிரசார சுற்றுப்பயணம் விவரம் வருமாறு:-

ஏப்ரல் 7-ந்தேதி கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி – ஆத்தூர், நாகர்கோவில், ஏப்ரல் 8-ந்தேதி திருநெல்வேலி தொகுதி – சேரன்மாதேவி, வள்ளியூர், பாளையம்கோட்டை, ஏப்ரல் 9-ந்தேதி மதுரை, தேனி தொகுதி, ஏப்ரல் 10-ந்தேதி ராமநாதபுரம் தொகுதி – தொண்டி,பரமக்குடி, ராமநாதபுரம். ஏப்ரல் 11-ந்தேதி சிவகங்கை தொகுதி – சிவகங்கை, காரைக்குடி, ஆலங்குடி, ஏப்ரல் 12-ந்தேதி தஞ்சாவூர் தொகுதி – பட்டுகோட்டை, மன்னார்குடி, தஞ்சாவூர். ஏப்ரல் 13-ந்தேதி திருச்சி, திண்டுக்கல் தொகுதிகள், ஏப்ரல் 14-ந்தேதி கோயம்புத்தூர், திருப்பூர் தொகுதிகள்.

ஏப்ரல் 15-ந்தேதி திருப்பூர், நாமக்கல் தொகுதிகள் – பவானி, நாமக்கல், ஏப்ரல் 16-ந்தேதி சேலம் தொகுதி – எடப்பாடி, வீரபாண்டி, சேலம் மாநகர், ஏப்ரல் 17-ந்தேதி கள்ளக்குறிச்சி, கடலூர் தொகுதிகள் – கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், கடலூர், ஏப்ரல் 18-ந்தேதி புதுச்சேரி தொகுதி, ஏப்ரல் 19-ந்தேதி விழுப்புரம், வேலூர் தொகுதிகள். ஏப்ரல் 20 வடசென்னை தொகுதி – கொளத்தூர், ஆர்.கே நகர், ராயபுரம், சோழிங்கநல்லூர், ஏப்ரல் 21-ந்தேதி தென்சென்னை தொகுதி – சேப்பாக்கம், வில்லிவாக்கம், எம்.எம்.டி.ஏ. காலனி, சைதாப்பேட்டை, ஏப்ரல் 22-ந்தேதி மத்திய சென்னை தொகுதி – மயிலை, வேளச்சேரி, விருகம்பாக்கம் ஆகிய இடங்களில் சீமான் பிரசாரம் மேற்கொள்கிறார்.

நாம் தமிழர் கட்சி யாரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறது என்ற விவரம் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் இது குறித்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூறும்போது, ‘ஈழத்தமிழர் பிரச்சினையில் துரோகம் செய்தவர்களுக்கு எதிராக சீமான் பிரசாரம் செய்ய இருக்கிறார்’ என்று அவர்கள் தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top