மருத்துவ படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வை இரண்டு கட்டங்களாக நடத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

201604281651220710_SC-orders-two-phase-single-common-entrance-test-for-MBBS-BDS_SECVPFமருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர்களை சேர்க்க உச்சநீதிமன்றம் 2013ம் ஆண்டு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த தடை உத்தரவை எதிர்த்து மத்திய அரசு, மருத்துவ கவுன்சில் சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இதற்கு முன்னதாக பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை ரத்து செய்வதாக அறிவித்தது. மேலும் மருத்துவ படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தவும் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டு பொது நுழைவுத் தேர்வு நடத்த உத்தரவிடக்கோரி பொது மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த ஆண்டிற்கான பொது நுழைவுத் தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பொதுநுழைவுத் தேர்வுக்கான புதிய அட்டவணை இன்று (ஏப்ரல் 28) முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது நுழைவுத்தேர்வுக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து பொது நுழைவுத்தேர்வு தொடர்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. அதன்படி இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத்தேர்வை நடத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், நுழைவுத் தேர்வு தொடர்பான அட்டவணையையும் வெளியிட்டது. அதன்படி, மே 1 முதல்கட்ட தேர்வையும், ஜூலை 24-ம் தேதி இரண்டாம் கட்டத் தேர்வையும் நடத்த வேண்டும். ஆகஸ்ட் 17-ல் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, செப்டம்பர் 30-ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top