தமிழகம் எதிர்ப்பு: மருத்துவ பொது நுழைவுத்தேர்வு தொடர்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர்களை சேர்க்க உச்சநீதிமன்றம் 2013ம் ஆண்டு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த தடை உத்தரவை எதிர்த்து மத்திய அரசு, மருத்துவ கவுன்சில் சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இதற்கு முன்னதாக பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை ரத்து செய்வதாக அறிவித்தது. மேலும் மருத்துவ படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தவும் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டு பொது நுழைவுத் தேர்வு நடத்த உத்தரவிடக்கோரி பொது மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த ஆண்டிற்கான பொது நுழைவுத் தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என மருத்துவ கவுன்சில் மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பொதுநுழைவுத் தேர்வுக்கான புதிய அட்டவணை இன்று (ஏப்ரல் 28) முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது நுழைவுத்தேர்வுக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. 2007-ல் இருந்தே பொது நிழைவுத்தேர்வு கிடையாது என்றும், மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்த சிறப்பு சட்டம் உள்ளது என்றும் தமிழகம் தரப்பில் வாதிடப்பட்டது. பொது நுழைவுத்தேர்வில் தமிழகத்தை சேர்க்கக்கூடாது என்றும் தமிழக வழக்கறிஞர் வலியுறுத்தினார்.

இதையடுத்து, பொது நுழைவுத்தேர்வு தொடர்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. பொது நுழைவுத் தேர்வு அட்டவணை குறித்து தீர்ப்பில் தெரிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top