சென்னை தீவுத்திடலில் 5-ந்தேதி சோனியா-கருணாநிதி ஒரே மேடையில் பிரசாரம்

201604281143276625_Sonia-Karunanidhi-Chennai-theevu-thidal-campaign-May-5th_SECVPFதமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 16 நாட்களே உள்ளதால் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சோனியாகாந்தி 5-ந்தேதி பிரசாரம் செய்கிறார்.

அன்று மாலை சென்னையில் தீவு திடலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் ஒரே மேடையில் பேசுகிறார்.

சோனியா – கருணாநிதி பேச இருக்கும் தீவு திடலை தி.மு.க. முன்னாள் எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா ஆகியோர் பார்வையிட்டனர்.

அவர்களுடன் வேட்பாளர்கள் சேகர்பாபு, ராயபுரம் மனோ, கராத்தே தியாகராஜனும் உடன் சென்றனர்.

பொதுக்கூட்டம் பற்றி டி.கே.எஸ்.இளங்கோவன் கூறும்போது, 1 லட்சம் பேர் கூட்டத்தில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வேட்பாளர்களும் மேடையில் அறிமுகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

முன்னதாக காலை புதுச்சேரியில் நடக்கும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு பிரசாரம் செய்கிறார்.

இது தொடர்பாக புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி வருகிற மே மாதம் 5-ந் தேதி புதுவையில் பிரசாரம் செய்ய உள்ளார். அதே போல துணைத்தலைவர் ராகுல்காந்தி மே மாதம் 2-வது வாரத்தில் பிரசாரம் செய்ய உள்ளார்.

இவ்வாறு நமச்சிவாயம் எம்.எல்.ஏ. கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top