பாபர் மசூதி இடிப்பு அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, நரசிம்ம ராவுக்கு தெரிந்த நடைபெற்றது : கோப்ரா போஸ்ட்

14ayodhya5பாபர் மசூதி இடிக்கப்பட்டது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சம்பவம் என்றும், இந்த சதித்திட்டம் குறித்து பா..ஜனதா மூத்த தலைவர்களான எல்.கே.. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டவர்களுக்கு மட்டுமல்லாது, அப்போதைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவுக்கும் முன்கூட்டியே தெரியும் என்றும் தாங்கள் மேற்கொண்ட’ ஸ்டிங் ஆப்ரேஷன்’ எனப்படும் ரகசிய வீடியோ பதிவு மூலம் தெரியவந்துள்ளதாக கோப்ரா போஸ்ட் இணைய தளம் தெரிவித்துள்ளது.

1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி பாபர் மசூதி கரசேவர்களால் இடிக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக கோப்ராபோஸ்ட் இணையதளம் நடத்திய ஸ்டிங் ஆபரேசனில் மசூதி திட்டமிட்டே இடிக்கப்பட்டுள்ளது என்றும், பா.ஜனதா தலைவர் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷிக்கு தெரியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது உத்தரபிரதேச மாநில முதலமைச்சராக இருந்த கல்யாண் சிங்குக்கும் இது தெரியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பில் முன்னணியில் நின்ற ராம்ஜென்ம பூமி இயக்கத்தினர் வினய்கட்டியார், உமாபாரதி,மெகந்த் வேதாந்தி உள்ளிட்ட 23 பேரிடம் இந்த ஸ்டிங் ஆப்ரேஷன் மேற்கொள்ளப்பட்டதாக கோப்ரா போஸ்ட் தெரிவித்துள்ளது.

‘கோப்ரா போஸ்ட்’  இணையதளத்தின் இணையாசிரியர் கே. ஆஷிஷ்,  அயோத்தியா இயக்கம் குறித்து ஆய்வு செய்து தாம் ஒரு புத்தகம் எழுத உள்ளதாக கூறி, மேற்கூறிய 23 பேரிடமும் பேட்டி எடுத்துள்ளார். அப்போது அவர்கள் கூறியவற்றை ரகசிய வீடியோ கேமராவில் பதிவு செய்துள்ளார்.

ஆஷிஷ் பேட்டியெடுத்த 23 பேரில் 15 பேர், பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரித்த லிபரான் கமிஷனிலும், சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் 19 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தளம், சிவசேனா ஆகிய அமைப்புகள் திட்டம் தீட்டி, பாபர் மசூதி இடிப்புக்காக கரசேவர்களுக்கு முன்கூட்டியே மாத கணக்கில் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், இதற்கு ‘ ஆப்ரேஷன் ஜன்மபூமி’ என பெயர் சூட்டப்பட்டு, ராணுவ துல்லியத்துடன் பாபர் மசூதி இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இது தொடர்பாக அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி முன்னிலையில் 1992 ஆம் ஆண்டு 5 ஆம் தேதி உறுதி மொழி எடுக்கப்பட்டதாகவும் அந்த 23 பேரும் கூறியதாக கோப்ரா போஸ்ட் கூறியுள்ளது.

தேர்தல் நடைபெற இருந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சிவனேசா சதிதிட்டம் குறித்து இவர்கள் வெளிப்படையாக பேசினர் என்றும், இது மிகவும் தெளிவான திட்டமிட்ட செயல் என்றும், கரசேவகர்கள் திடீரென கூடி இடிக்கவில்லை என்றும் அவர்கள் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கோப்ராபோஸ்டின் இந்த ஸ்டிங் ஆப்ரேசனை ஆர்.எஸ்.எஸ். நிராகரித்துள்ளது. மேலும் இது இதனை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் பா..ஜனதா புகார் அளித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top