233 அதிமுக வேட்பாளர்கள் இன்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல்!

முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா பங்கேற்ற 8 பொதுக் கூட்டங்களில் 233 வேட்பாளர்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, அதிமுக சார்பில் போட்டியிடும் 233 வேட்பாளர்களும் இன்று வியாழக்கிழமை (ஏப். 28) ஒரே நாளில் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்கின்றனர்.

அதிமுக வேட்பாளர்கள்

முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தை சென்னையில் கடந்த 9-ஆம் தேதி தொடங்கினார். தீவுத் திடலில் நடைபெற்ற இந்த பிரசார பொதுக் கூட்டத்தில் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 20 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர்.

இதன்பின், விருத்தாசலம், தருமபுரி, அருப்புக்கோட்டை, காஞ்சிபுரம், சேலம், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் மற்ற வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். மதுரையில் நேற்று (ஏப். 27) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட வேட்பாளர்களுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 233 வேட்பாளர்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர்.

வேட்பாளர்கள் அறிமுகம் முடிந்துள்ள நிலையில், அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் இன்று வியாழக்கிழமை (ஏப். 28) வேட்புமனுக்களை தாக்கல் செய்யவுள்ளனர். அனைத்து வேட்பாளர்களும் ஒரே நேரத்தில் மனு தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி, நண்பகல் 12 மணிக்கு மேல் அவர்கள் மனு தாக்கல் செய்கின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top