பாராளுமன்ற மேல்சபை உறுப்பினர்களாக சுப்பிரமணிய சாமி, மேரி கோம் பதவி ஏற்றனர்

201604261151163797_subramanian-swamy-mary-kom-takes-oath-as-member-of-rajya_SECVPFபாராளுமன்ற மேல்சபை உறுப்பினர்களாக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, பிரபல குத்துச் சண்டை வீராங்கணை மேரி கோம் ஆகியோர் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர்.

பாராளுமன்ற மேல்சபையில் காலியாக இருந்த உறுப்பினர் பதவிகளை நிரப்புவதற்கு சமீபத்தில் பல மாநில சட்டசபை மற்றும் மேல்சபைகளில் தேர்தல் நடைபெற்றது. இவ்வகையில், தேர்வான ஒன்பது பேர் நேற்று பாராளுமன்ற மேல்சபை உறுப்பினர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, பிரபல குத்துச் சண்டை வீராங்கணை மேரி கோம் ஆகியோர் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு பாராளுமன்ற மேல்சபை சபாநாயகரும், துணை ஜனாதிபதியுமான ஹமித் அன்சாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top