ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருதம்; மக்களவையில் ஸ்மிருதிஇரானி தகவல்;சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

Smrthi rani

முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் கோபால்சாமி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி ஐ.ஐ.டி.-களில் சமஸ்கிருத மொழியை கற்பிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளதாக மக்களவையில் எழுத்து மூலம் பதில் அளித்த இரானி தெரிவித்துள்ளார்.

கோபால்சாமி குழுவின் பரிந்துரைப்படி சமஸ்கிருத மொழியை மட்டும் அல்லாமல், அந்த மொழியில் இருக்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், நவீன வாழ்க்கைக்குத் தேவையான ஒழுக்க நெறிகளையும் கற்பிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளதாக இரானி அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளது.

2000-ல் ஆட்சியில் இருந்த வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ஐ.ஐ.டி. உட்பட 40 மத்திய பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருத மொழியை கற்பிக்கும்படி வலியுறுத்தியது. இதனை அடுத்து பல பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதம் கற்பிக்கப்பட்டு வருகிறது.

செத்த மொழியாகிய சமஸ்கிருதத்திற்கு உயிர் கொடுக்க பாரதிய ஜனதா கட்சி அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது இது மிகவும் கண்டிக்கத்தக்கது தமிழகத்திலே தமிழை உயர்நீதி மன்றத்திலே வழக்காடும் மொழியாக ஆக்கவேண்டும் என்று தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் சூழலில் அதற்கு  மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் செத்த மொழியான சமஸ்கிருதத்தை பயிற்றுவிக்க முயற்சி செய்வது மிகவும் கண்டனத்துக்குரியது என சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்குகிறார்கள்

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top