மும்பையுடன் இன்று மோதல்: பஞ்சாப் அணிக்கு 2–வது வெற்றி கிடைக்குமா?

201604251155492679_Today-clash-with-Mumbai-Punjab-team-play_SECVPFஐ.பி.எல். போட்டியின் 21–வது ‘லீக்’ ஆட்டம் மொகாலியில் இன்று நடக்கிறது. இதில் மில்லர் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்– ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

பஞ்சாப் அணி ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. புனே அணியை 6 விக்கெட்டில் வென்று இருந்தது. 4 போட்டிகளில் (குஜராத், டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத்) தோற்று இருந்தது.

2 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ள பஞ்சாப் அணிக்கு இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இருக்கிறது. பேட்டிங்கில் அந்த அணி மோசமாக இருக்கிறது. அந்த அணி மும்பையை வீழ்த்தி 2–வது வெற்றி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை அணி 2 வெற்றி, 4 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி கொல்கத்தா, பெங்களூர் அணிகளை வென்று இருந்தது. புனே, குஜராத், ஐதராபாத், டெல்லி அணிகளிடம் தோற்று இருந்தது. 5–வது தோல்வியை தவிர்த்து 3–வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் மும்பை அணி உள்ளது.

இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் பஞ்சாப் 8 போட்டியிலும், மும்பை 8 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top