இந்தியர்களின் ஆங்கில உச்சரிப்பை கிண்டல் செய்த டொனால்டு டிரம்ப் கிண்டல்!

mayyyy

அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், பிரசாரத்தின்போது இந்தியர்களின் ஆங்கில உச்சரிப்பையும், இந்தியாவின் அழைப்பு மையங்களையும் (கால் சென்டர்கள்) கிண்டல் செய்ததது பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பிலான வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், வங்கித் தொழிலுக்குப் பெயர் பெற்ற டெலவேர் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அமெரிக்காவின் வங்கி சேவைகள் தொடர்பான வேலைவாய்ப்புகள் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அளிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
பிரசாரத்தின்போது அவர் கூறியதாவது:
எனது கடன் அட்டை குறித்த விவரங்களைத் தரும் வேலை அமெரிக்கர்களுக்குத் தரப்பட்டுள்ளதா, வெளிநாட்டினருக்குத் தரப்பட்டிருக்கிறதா என்பதை அறியும் நோக்கில் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டேன். அப்போது எதிர் முனையில் பேசியவரிடம் “நீங்கள் எங்கிருந்து பேசுகிறீர்கள்’ என்று கேட்டேன்.
அதற்கு, “(இந்தியர்களின் ஆங்கில உச்சரிப்பில் பேசுவது போல கிண்டல் செய்து) நாங்கள் இந்தியாவிலிருந்து பேசுகிறோம்’ என்று பதில் வந்தது.
அதைக் கேட்டதும் “அப்படியா, நல்லது’ என்று சொல்லிவிட்டு தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டேன்.
இந்தியா அருமையான நாடுதான். எனக்கு அந்த நாட்டின் மீதோ, அதன் தலைவர்கள் மீதோ கோபமில்லை.
குழந்தையின் கையில் இருக்கும் மிட்டாயைப் பிடுங்கி அடுத்தவர் கையில் கொடுப்பதைப் போல், அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பிடுங்கி இந்தியா, சீனா, ஜப்பான், வியத்நாம் ஆகிய நாடுகளுக்கு வழங்கும் அமெரிக்கத் தலைவர்கள் மீதுதான் என் கோபம் என்றார் டொனால்டு டிரம்ப்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top