பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்பட 6 பேர் மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம்!

சுப்பிரமணியன் சுவாமிபாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட 6 பேர், மாநிலங்களவை எம்.பிக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொருளாதார நிபுணர் நரேந்திர ஜதாவ், குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, கேரளாவைச் சேர்ந்த நடிகர் சுரேஷ் கோபி, பத்திரிகையாளர் ஸ்வபன் தாஸ்குப்தா ஆகியோரும்‌ மாநிலங்களவை எம்.பிக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சமூக சேவை, அறிவியல் உள்ளிட்ட பிரிவுகளில் அந்த 6 பேரையும் எம்.பிக்களாக நியமிக்க மத்திய அரசு பரிந்துரை ‌செய்தது. இதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top