தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது!

தேர்தல் ஆணையம்தமிழகம் மற்றும் கேரள சட்டப் பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

தமிழகத்திலுள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 16ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், அவர்களுக்கான அலுவலகங்கள் தொகுதிக்குள்ளேயே இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 29-ம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 30ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையும், வேட்பு மனுக்களை மே 2-ம் தேதி வரை மனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்யும்போது அளிக்கும் தகவல்கள், சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரங்கள், வருமான வரித் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினரால் உடனடியாக சரி பார்க்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தவறான விவரங்கள் அளிக்கப்பட்டிருந்தால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, 6 மாதங்கள் வரை சிறை தண்டனை அளிக்கப்பட வாய்ப்புள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top