உலகின் சிறந்த விளையாட்டுவீரர் லாரியஸ் விருது டென்னிஸ் வீரர் ஜோகோவிக்குக்கு வழங்கப்பட்டது

tennn

விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் லாரியஸ் உலக விளையாட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்டவர்ளுக்கு விருது வழங்கும் விழா பெர்லின் நகரில் நடைபெற்றது.

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான செர்பியாவின் ஜோகோவிக் சிறந்த வீரருக்கான விருதை பெற்றார். இந்த விருதை அவருக்கு பார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிகோ ரோஸ்பெர்க் வழங்கினார். ஜோகோவிக் கடந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 3 கிராண்ட் ஸ்லாம் பட்டங் களை வென்றிருந்தார். மேலும் பிரெஞ்ச் ஓபனில் இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந் தார்.

3வது முறையாக லாரியஸ் விருதை வென்ற ஜோகோவிக் பேசும்போது, ‘‘இந்த விருதை பெறுவதில் நான் பெருமையடைகிறேன். ஒரு சிறந்த குழுவை நான் பெற்றிருக்காவிட்டால் இது சாத்தியமே இல்லை.

டென்னிஸ் மீதான காதலும், உணர்வும்தான் என்னை இங்கு கொண்டு வந்துள்ளது. விளையாட்டு பல வழிகளில் என்னை ஊக்கப்படுத்தியுள்ளது. இந்த விருதை என்னை ஊக்கப் படுத்திய இருவருக்கு சமர்ப்பிக்கிறேன். நிக்கி லாடா, ஜோஹன் கிரைப் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.

மகளிர் பிரிவில் சிறந்த வீராங்கனையாக அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தேர்வானார். கடந்த ஆண்டு 3 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றிருந்த செரீனா 3-வது முறையாக லாரியஸ் விருதை கைப்பற்றினார்.

அமெரிக்காவை சேர்ந்த கோல்ப் வீரர் ஜோர்டான் ஸ்பைத் திருப்புமுனையை ஏற்படுத்திய வீரர் என்ற விருதை வென்றார்.

சிறந்த அணிக்கான விருதை நியூஸிலாந்து ரக்பி அணி வென்றது. அந்த அணியின் டன் கார்ட்டர் மீண்டு வந்த வீரருக்கான விருதை கைப்பற்றினார். கார்ட்டர் 2011ல் காயத்தால் அவதிப்பட்ட நிலையில் அதில் இருந்து மீண்டு வந்து சிறப்பாக விளையாடினார். கடந்த ஆண்டு ரக்பி உலகக் கோப்பையை நியூஸிலாந்து வெல்வதற்கு உறுதுணையாகவும் இருந்தார் கார்ட்டர்.

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற முன்னாள் வீரர் நிக்கி லாடாவுக்கு வாழ்நாள் சாதனையாளார் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 67 வயதான லாடா ஆஸ்திரியா நாட்டை சேர்ந்தவர். 1975, 1977, 1984 ஆகிய ஆண்டுகளில் பார்முலா ஒன் கார்பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

நேர்மையான வீரர் விருதுக்கு மறைந்த நெதர்லாந்து கால்பந்து வீரர் ஜோஹன் கிரைப் தேர்வானார். புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த மாதம் மரணமடைந்தார். இந்த விருதை அவரது மகன் ஜோர்டி பெற்றுக்கொண்டார்.

சிறந்த மாற்றுத்திறனாளி வீரருக்கான விருதை பிரேசில் நாட்டை சேர்ந்த நீச்சல் வீரர் டேனியல் டயஸூம், சிறந்த அதிரடி வீரர் விருதை ஜெர்மனியை சேர்ந்த டிரையத்லான் வீரர் ஜன் போர்டெனனோவும் பெற்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top