கெய்ல் இரண்டு போட்டிகளில் ஓய்வு

gayle__largeஐபிஎல் கிரிக்கெட்டில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கெய்லின் மனைவி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவர் ஜமைக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் அணி அடுத்த ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் புனே அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு போட்டிகளிலும் கெய்ல் கலந்து கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top