ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் விளையாட தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை தீபா

இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் பிரேசில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.

depaaஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் விளையாட தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த தகுதிச் சுற்றில் 4-வது இடம் பிடித்ததை அடுத்து அவர் ஒலிம்பிக்ஸில் இந்தியா சார்பில் விளையாட தகுதி பெற்றுள்ளார். 22 வயது நிரம்பிய தீபா கர்மாகர், 52.698 புள்ளிகள் பெற்று தகுதிச் சுற்றில் தேர்ச்சி அடைந்தார்.

ரியோ ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் இந்தியா சார்பில் விளையாட தகுதி பெற்றுள்ள தீபா கர்மாகர், இந்தியாவிலிருந்து இவ்விளையாட்டுக்கு தகுதி பெற்றுள்ள முதல் பெண் என்ற வரலாற்றுச் சாதனையும் படைத்துள்ளார்.

இதுதவிர 52 ஆண்டுகளுக்குப் பிறகு ஜிம்னாஸ்டிக் பிரிவில் இந்தியாவை மீண்டும் தகுதி பெறச் செய்துள்ள பெருமையையும் அவர் பிடித்துள்ளார்.

தீபா தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றது சர்வதேச ஜிம்னாஸ்டிக் கூட்டமைப்பு (The International Federation of Gymnastics ) அதன் அதிகாரபூர்வ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் இதுவரை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் 11 ஆண்கள் பங்கேற்றுள்ளனர் (1952-ல் இருவர், 1956-ல் மூவர், 1964-ல் 6 பேர்).

ஆனால், இப்போதுதான் முதன்முறையாக பெண் ஒருவர் இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

தீபா கர்மாகர் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர். வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் தலைநகரம் அகர்தலா இவரது சொந்த ஊர். இளமைப் பருவத்தில் தீபாவுக்கு அவரது தந்தை துலால் ஜிம்னாஸ்டிக் விளையாட்டை அறிமுகப்படுத்தியுள்ளார். அப்போதெல்லாம் கீழே விழுந்துவிடுவோமோ என்ற பயத்தில்தான் தீபா ஜிம்னாஸ்டிக்கை எதிர்கொண்டிருக்கிறார். அவரது தந்தையும் பளு தூக்குதல் பயிற்றுனருமான துலால் அளித்த உத்வேகத்தினால் தீபாவுக்கு அதிக ஈடுபாடு வந்துள்ளது. பின்னர் பி.எஸ்.நந்தி, கல்பனா தேப்நாத் ஆகியோரிடம் முறைப்படி ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெற்ற தீபா தற்போது இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளார்.

கடந்த ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் தீபா. காமன்வெல்த் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் வெண்கலம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை அவர் பெற்றார்.

தீபா கர்மாகருக்கு ட்விட்டர் வழியாக சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சச்சின் தனது பதிவில், “வாழ்த்துகள் தீபா கர்மாகர். ஒலிம்பிக் போட்டிக்கு நீங்கள் தகுதி பெற்றதன் மூலம் வரலாறு படைக்கப்பட்டுள்ளது. உங்களது சாதனை இளம் இந்தியர் களை ஊக்குவிக்கும். ஒலிம்பிக் கில் சிறப்பாக செயல்பட வாழ்த் துகள்” என்று தெரிவித்துள்ளார். இதேபோல் சேவாக், லட்சுமணன், விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சர்பானந்த சோனோ வால் ஆகியோருடன் இந்திய விளையாட்டு ஆணையம் தரப்பிலும் தீபா கர்மாகருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top