மெட்ரோ ரயில் பயணக் கட்டணத்தை குறைக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

metro_fb__largeமெட்ரோ ரயில் பயணக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்‌ளார்.

இதுதொடர்பாக அ‌வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மெட்ரோ ரயிலில் பயணக் கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் அதில் பயணம் செய்யும் மக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக கூறியுள்ளார்.

ஆகையால், டெல்லி, ஜெய்ப்பூர், பெங்களூருவில் இருக்கும் மெட்ரோ ரயில் கட்டணத்தைப் போன்று சென்னையிலும் கட்டணத்தை‌ குறைவாக நிர்ணயிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு மெட்ரோ ரயில் சேவையை, ஏற்கனவே உள்ள பறக்கும் ரயில், மின்சார ரயில் சேவையுடன் இணைத்திடவும், விரிவுபடுத்திடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top