ஐ.பி.எல்: மும்பை அணியை விழ்த்தி திரில் வெற்றி பெற்றது குஜராத்

201604170035317718_Finch-powers-Gujarat-to-third-win_SECVPFமும்பை வாக்கடே மைதானத்தில் தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற சுரேஷ் ரெய்னா முதலில் பந்து வீச முடிவு செய்தார்.  நாளை திருமணம் நடைபெறவுள்ளதால் ஜடேஜா குஜராத் அணியில் இடம்பெறவில்லை.

மும்பை அணியில் ரொகித் சர்மாவும், பார்த்திவ் படேலும் தொடக்க வீரராக களமிறங்கினார்கள். ரொகித் 7 ரன்களில் குல்கர்னி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பாண்டியா இந்த ஆட்டத்திலும் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன் பிறகு களமிறங்கிய ஜோஸ் பட்லர்(16), ராயுடு(20), போலார்ட்(1) மற்றும் ஹர்பஜன்(8) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் மும்பையின் ரன் வேகம் மிகவும் குறைந்தது.

இறுதியில் குணால் பாண்டியா 11 பந்துகளில் 20 ரன்களும், டிம் சவுதி 11 பந்துகளில் 25 ரன்களும் எடுக்க, மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 143 ரன்கள் எடுத்தது.

144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. பிரண்டன் மெக்கல்லம் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து பின்ச் கேப்டன் ரெய்னாவுடன் இணைந்து நிதானமாக ரன் குவித்தார். ஆனால் 27 எடுத்திருந்த நிலையில் ரெய்னா ஆட்டமிழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக், பிராவோ, நாத் மற்றும் பாக்னர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க மும்பையின் கை ஓங்கியது.

ஆனால் பின்ச் மட்டும் நிலைத்து நின்று ரன் குவித்தார். கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரின் மூன்றாவது பந்தை குல்கர்னி பவுண்டரிக்கு விரட்டினார். கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பின்ச் பவுண்டரி அடித்து குஜராத் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.

67 ரன்கள் குவித்த பின்ச் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இது அவர் பெறும் 3-வது ஆட்டநாயகன் விருது ஆகும். குஜராத் அணி தான் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top