ஆந்திராவில் 118 டிகிரி வெயில்: ஒரே நாளில் 24 பேர் சாவு

201604161523177221_Sun-stroke-killed-24-in-Andhra-Pradesh_SECVPFஆந்திரா, தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரிக்கிறது.

ஆந்திராவின் 13 மாவட்டங்களிலும் 110 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. விஜயவாடாவில் 118 டிகிரி வெயில் பதிவானது. பகலில் அணல் காற்று வீசுவதால் மக்கள் வெளியே செல்ல தயங்குகின்றனர்.

வெயில் கொடுமைக்கு ஏற்கனவே 100–க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 24 பேர் பலியாகி விட்டனர்.

கடப்பா, கர்னூல் மாவட்டத்தில் தலா 7 பேரும், சித்தூரில் 4 பேரும், அனந்தபுரம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் தலா 3 பேரும், விஜய நகரம், குண்டூரில் தலா 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.

குண்டூர் மாவட்டத்தில் பஸ்சில் பயணம் செய்த எர்ரபாளையத்தைச் சேர்ந்த திருப்பதியய்யா வெயில் தாங்காமல் பஸ்சிலேயே மயங்கி விழுந்து இறந்தார். புற்று நோயாளியான இவர் ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டு இருந்த போது பரிதாப முடிவு ஏற்பட்டது.

தெலுங்கானா மாநிலத் தில் 103 டிகிரிக்கு வெயில் கொளுத்துகிறது. பல மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. வெயில் காரணமாக பள்ளி– கல்லூரிகள் மூடப்பட்டன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top