குஜராத் அணி ஹாட்ரிக் வெற்றி பெறுமா? மும்பையுடன் இன்று மோதல்

201604161214199342_Lions-to-face-Mumbai-in-IPL-2016_SECVPFஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 9–ந் தேதி தொடங்கியது. இந்த போட்டி தொடங்கிய தினத்தில் இருந்து இதுவரை தினசரி ஒரு ஆட்டமே நடைபெற்று வருகிறது. இன்று 2 ஆட்டம் நடக்கிறது.

மாலை 4 மணிக்கு ஐதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்– காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐதராபாத் அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் பெங்களூரில் 45 ரன்னில் தோற்று இருந்தது. சொந்த மண்ணில் விளையாடுவதால் முதல் வெற்றியை பெறும் ஆர்வத்துடன் சந்திக்கிறது.

முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணி 2–வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் டெல்லியை வென்றது. 2–வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சிடம் தோற்றது.

மும்பை வாக்கடே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்–ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணிகள் மோதுகின்றன.

மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் புனே அணியிடம் 9 விக்கெட்டில் தோற்றது. 2–வது ஆட்டத்தில் கொல்கத்தாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

குஜராத்தை வீழ்த்தி 2–வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் மும்பை அணி இருக்கிறது. குப்திலின் வருகை அந்த அணிக்கு மேலும் பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

குஜராத் அணி மும்பையை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியையும், 2–வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ரைசிங் புனே அணியையும் வீழ்த்தியது.

குஜராத் அணியில் தொடக்க வீரர்களான ஆரோன் பிஞ்ச், மேக்குல்லம் நல்ல நிலையில் உள்ளார். கேப்டன் ரெய்னா, பிராவோ, பலக்னா, தினேஷ் கார்த்திக் போன்ற சிறந்த வீரர்களும் அந்த அணியில் உள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top