ஐ.பி.எல்: 8 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்

201604152326231209_Delhi-Daredevils-beat-Kings-XI-Punjab-by-8-wickets_SECVPF9-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 7-வது லீக் ஆட்டத்தில் டேவிட் மில்லர் தலமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஜாகீர் கான் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளும் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங்கை துவக்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததோடு மட்டுமல்லாமல் மந்தமாகவும் ரன் சேர்த்தது.

இதனால், நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்புக்கு 111 ரன்களை மட்டுமே சேர்த்தது. டெல்லி அணியின் அமித் மிஸ்ரா 3 ஓவர்கள் வீசி 11 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதையடுத்து 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி டேர்டெவில்ஸ் அணி விளையாடியது. டெல்லி அணியில் டி காக், எஸ்.எஸ்.ஐயர் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 3 ரன்களில் ஐயர் ஆட்டமிழக்க, டி காக்குடன் சாம்சன் ஜோடி சேர்ந்தார்.

இருவரும் மிகவும் நிதானமாக விளையாடினர். ரன்கள் ஒன்று, இரண்டாக தான் எடுக்க முடிந்தது. டி காக் கொடுத்த அற்புதமான கேட்சை முரளி விஜய் தவறவிட்டார். அப்போது டி காக் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். 7.6 ஓவர்களில் டெல்லி அணி 50 ரன்கள் எடுத்தது. சீரான இடைவெளியில் ரன் எடுத்து வந்த சாம்சன் 32 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்.

அற்புதமாக விளையாடிய டி காக் 38 பந்துகளில் அரைசதம் எடுத்தார். இதனையடுத்து டெல்லி அணி 13.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது. டி காக் 59 ரன்களும், நெகி 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 4 விக்கெட்டுக்கள் வீழ்த்திய அமித் மிஸ்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

தனது முதல் போட்டியில் டெல்லி அணி, கொல்கத்தாவிடம் தோல்வி அடைந்தது. நாளை ஐதராபாத்தில் நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top