சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்: இந்திய அணி முதலிடம்!

team indiaசர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில், இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டியில் தொடர்ந்து நான்கு வெற்றிகளை தக்கவைத்து கொண்டதன் மூலம் இந்திய அணி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

இலங்கை மற்றும் இந்திய அணிகள் தலா 130 தர மதீப்பிட்டு புள்ளிகளை பெற்றுள்ள போதிலும், இலங்கையை விட குறைவான போட்டிகளில் விளையாடியிருப்பதன் மூலம் இலங்கையை பின்னுக்கு தள்ளியுள்ளது இந்தியா.

ஆனால் தற்போது இவ்விரு அணிகளுமே அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், அந்த போட்டிகளின் முடிவை பொறுத்தே, இந்திய அணி முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளுமா என்பது தெரிய வரும். மேலும் இந்த தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் அணி மூன்றாவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா நான்காவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top