தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்படவில்லை: சீத்தாராம் யெச்சூரி

imagesதேர்தல் ஆணையம் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் செயல்படவில்லை எனவும் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கொல்கத்தா நகருக்கு நேற்று வந்தார். அப்போது அவர் கூறியதாவது:

மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும்படி இல்லை. தேர்தலை நியாயமாகவும், அதே சமயம் வெளிப்படையாகவும் நடத்த அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாகவும் தெரியவில்லை. இதுபோன்ற செயல்பாடுகளால் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

இதையடுத்து, மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் தேர்தலை சந்திக்கின்றதே? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, மக்களின் விருப்பப்படி மம்தா எதிர்ப்பு அலை வாக்குகளை ஒரே குடைக்குள் கொண்டு வரவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஒரு வலிமையான அணியை உருவாக்கவும் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன என்று பதில் அளித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top