மெக்குல்லம்–பிஞ்ச் சிறப்பான தொடக்கத்தால் வெற்றி: குஜராத் கேப்டன் ரெய்னா

201604151123149222_Raina-winning-credits-gives-openers_SECVPFஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜ்கோட்டில் நேற்று இரவு 6–வது லீக் ஆட்டம் நடந்தது. இதில் டோனி தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் – சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணிகள் மோதின.

முதலில் விளையாடிய புனே 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்தது. டுபிளஸ்சிங் 69 ரன் எடுத்தார்.

அடுத்து விளையாடிய குஜராத் அணி 18 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் பிஞ்ச் 50 ரன்னும் (36 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), பிரண்டன் மெக்குல்லம் 49 ரன்னும் (31 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 8.3 ஓவரில் 85 ரன் சேர்த்தனர். இந்த சிறப்பான தொடக்கத்தால் குஜராத் அணி எளிதாக வென்றது.

வெற்றி குறித்து குஜராத் கேப்டன் சுரேஷ் ரெய்னா கூறியதாவது:–

தொடக்க வீரர்கள் ஆரோஸ் பிஞ்ச், மெக்குல்லம் சிறப்பாக விளையாடினார்கள். இது போன்ற ஆடுகளத்தில் 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட முடிவு செய்தேன். கேப்டன் என்பது வெறும் பெயர்தான் ஒவ்வொவரும் தங்களது பங்களிப்பை அளித்தனர் என்றார்.

புனே கேப்டன் டோனி கூறுகையில், 160 ரன் இலக்கை வைத்து கொண்டு முதல் 6 ஓவரில் 60 ரன் விட்டு கொடுத்து விட்டால் எப்போதுமே கடினமாக இருக்கும். எங்கள் அணியில் சிறந்த கலவையை கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்றார்.

குஜராத் அணி பெற்ற 2–வது வெற்றி இதுவாகும். முதல் ஆட்டத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி இருந்தது.

புனே அணிக்கு முதல் தோல்வி இது. தனது முதல் ஆட்டத்தில் மும்பையை தோற்கடித்தது.

குஜராத் தனது அடுத்த ஆட்டத்தில் நாளை மும்பையுடனும், புனே அணி 17–ந் தேதி பஞ்சாப்புடனும் மோதுகின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top