ஐ.பி.எல்.போட்டியில் அதிக அரைசதம் அடித்து காம்பீர் சாதனை

201604141016487388_Gautam-Gambhir-breaks-Suresh-Rainas-record-for-most-IPL_SECVPF9–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த 5–வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

முதலில் விளையாடிய கொல்கத்தா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 187 ரன் குவித்தது. கேப்டன் காம்பீர் 64 ரன்னும், மனீஷ் பாண்டே 52 ரன்னும் எடுத்தனர்.

அடுத்து விளையாடிய மும்பை அணி 19.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 188 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது.

கேப்டன் ரோகித் சர்மா 54 பந்தில் 84 ரன் எடுத்தார். மும்பை அணிக்கு இது முதல் வெற்றியாகும். தொடக்க ஆட்டத்தில் புனேவிடம் தோற்றது. கொல்கத்தா பெற்ற முதல் தோல்வி இதுவாகும். தொடக்க ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி இருந்தது.

இந்த போட்டியில் கொல்கத்தா கேப்டன் கவுதம் காம்பீர் 52 பந்தில் 64 ரன் எடுத்தார். இது அவருக்கு 27–வது அரை சதமாகும்.

இதன் மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக அரை சதம் அடித்து இருந்த சுரேஷ் ரெய்னாவின் சாதனையை காம்பீர் முறியடித்தார்.

சுரேஷ் ரெய்னா 26 அரை சதம் அடித்துள்ளார். டேவிட் வார்னர், ரோகித் சர்மா ஆகியோரும் 26 அரை சதம் எடுத்துள்ளனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்தவர்களில் காம்பீர் 3–வது இடத்தில் உள்ளார். அவர் 119 போட் டியில் 3235 ரன் எடுத்துள் ளார்.

முதல் இடத்தில் சுரேஷ் ரெய்னா (3719 ரன், 133 போட்டி), 2–வது இடத்தில் ரோகித் சர்மா (3476 ரன், 130 போட்டி) உள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top