கொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி முதல் வெற்றி

Defeat-KolkataThe-Mumbai-teams-first-win_SECVPFஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் மோதின. இதில் ‘டாஸ்’ ஜெயித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் கொல்கத்தாவை பேட் செய்ய பணித்தார். இதன்படி முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. தனது 27-வது அரைசதத்தை பூர்த்தி செய்த கேப்டன் கவுதம் கம்பீர் 64 ரன்களும் (52 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), மனிஷ் பாண்டே 52 ரன்களும் (29 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), ஆந்த்ரே ரஸ்செல் 36 ரன்களும் (17 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினர். மும்பை தரப்பில் மெக்லெனஹான் 2 விக்கெட்டுகளும், ஹர்பஜன்சிங், ஹர்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

தொடர்ந்து களம் இறங்கிய மும்பை அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. 25-வது ஐ.பி.எல். அரைசதத்தை எட்டிய கேப்டன் ரோகித் சர்மா 84 ரன்கள் (54 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) குவித்து களத்தில் இருந்தார். ஜோஸ் பட்லர் 41 ரன்களும் (3 பவுண்டரி, 3 சிக்சர்), பார்த்தீவ் பட்டேல் 23 ரன்களும் எடுத்தனர். 2-வது ஆட்டத்தில் ஆடிய மும்பைக்கு இது முதல் வெற்றியாகும். தொடக்க ஆட்டத்தில் புனே அணியிடம் தோற்றிருந்தது. அதே சமயம் 2-வது ஆட்டத்தில் விளையாடிய கொல்கத்தாவுக்கு இது முதல் தோல்வியாகும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top