42 பந்தில் 82 ரன்: டி வில்லியர்சுக்கு கோலி பாராட்டு

Virat-kohli-appreciation-to-de-villiers-for-42-balls-82-runs_SECVPF

9–வது ஐ.பி.எல். 20 ஒவர் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது. அந்த அணி 45 ரன் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்தை தோற்கடித்தது.

பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பெங்களூர் அணி 4 விக்கெட் இழப்புக்கு 227 ரன் குவித்தது. டிவில்லியர்ஸ் 42 பந்தில் 82 ரன்னும் (7 பவுண்டரி, 6 சிக்சர்), விராட் கோலி 51 பந்தில் 75 ரன்னும் (7 பவுண்டரி, 3 சிக்சர்) சர்பிராஸ் கான் 10 பந்தில் 35 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். முஷ்டாபிசுர் ரகுமான், புவனேஸ்வர் குமார் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்னே எடுக்க முடிந்தது. கேப்டன் வார்னர் அதிகபட்சமாக 25 பந்தில் 58 ரன்னும் (4 பவுண்டரி, 5 சிக்சர்), ஆசிஷ் ரெட்டி 18 பந்தில் 32 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். வாட்சன், யசுவேந்திர ஷால் தலா 2 விக்கெட்டும், மிலின் பர்வேஷ் ரசூல் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த வெற்றி குறித்து பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:–

டாசை தோற்றதால் நாங்கள் விரும்பியது கிடைக்கவில்லை. பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு உண்மையிலேயே அபாரமாக இருந்தது. டிவில்லியர்ஸ் பேட்டிங் மிகவும் அற்புதமாக இருந்தது. கடந்த ஆண்டு மும்பையில் நானும், அவரும் இணைந்து நல்ல ஜோடியை கொடுத்தோம்.

அதேபோல தான் இந்த ஆட்டத்திலும் நடந்தது. அவரது அதிரடி ஆட்டத்தால் நான் மெய்சிலிர்த்தேன். இந்த அதிரடியான ஆட்டத்தை அவரால் மட்டும் ஆட இயலும். அவருடன் இணைந்து விளையாடியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.

பெங்களூர் ஆடுகளத்தில் சுழற்பந்து வீரர்கள் நேர்த்தியுடன் பந்துவீசுவது எளிதானது அல்ல. பர்வேஸ் மிகவும் சிறப்பாக வீசினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தோல்வி குறித்து ஐதராபாத் கேப்டன் வார்னர் கூறும்போது, டிவில்லியர்ஸ்– விராட் கோலி ஜோடியை எங்களால் எளிதில் பிரிக்க முடியாமல் போனதே தோல்விக்கு காரணம். சர்பிராசும் அதிரடியாக விளையாடினார். 228 ரன் இலக்கு என்பது கடினமானதே. அடுத்தப் போட்டியில் எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்றார்.

பெங்களூர் அணி 2–வது ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்சை 17–ந்தேதியும், ஐதராபாத் அணி கொல்கத்தாவை 16–ந்தேதியும் சந்திக்கின்றன


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top