ஐ.பி.எல். போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற பி.சி.சி.ஐ. தயார்

mumbaiiiiiiiiiiமராட்டியத்தில் இருந்து ஐ.பி.எல்.-9 போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற பி.சி.சி.ஐ. தயாராக உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

9–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் 20 ஆட்டங்கள் மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பை, புனே மற்றும் நாக்பூரில் உள்ள ஸ்டேடியங்களில் நடத்தப்படுகிறது. ‘மராட்டிய மாநிலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை நிலவி வரும் இந்த சூழ்நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஆட்டங்களை வேறு மாநிலத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்’ என்று பொதுநல வழக்கு மும்பை ஐகோர்ட்டில் தொடரப்பட்டுள்ளது.

தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை கடுமையாக நிலவுவதால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை மராட்டிய மாநிலத்தில் இருந்து மாற்ற வேண்டும் என்று மும்பை ஐகோர்ட்டு யோசனை தெரிவித்தது. பதில்அளிக்க கிரிக்கெட் சங்கங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மற்றும் மாநில அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்நிலையில் மராட்டியத்தில் இருந்து ஐ.பி.எல். போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற பி.சி.சி.ஐ. தயாராக உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளதாக ஆங்கில செய்தி சேனல் செய்தி வெளியிட்டு உள்ளது.

கான்பூர், ராஞ்சி மற்றும் இந்தூர் மைதானங்களை மாற்று மைதானமாக கிரிக்கெட் வாரியம் கருத்தில் கொண்டு உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே மும்மை கிரிக்கெட் வாரியம் ஐகோர்ட்டில் அபிடவிட்டை தாக்கல் செய்து உள்ளது. மும்பை வான்கடே மைதானத்தை பராமரிக்க 7 முதல் 8 டேங்கர் தண்ணீரை வழங்க ராயல் வெஸ்டர்ன் இந்தியா டர்ஃப் ஒப்புக் கொண்டது என்று மும்பை கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது. ராயல் வெஸ்டர்ன் இந்தியா டர்ஃப் நிறுவனம் கழிவுநீரை சுத்திகரித்து கொடுக்கும் தண்ணீர் மட்டுமே பயன்படுத்தப்படும். நிறுவனம் கொடுக்கும் தண்ணீரே எங்களுக்கு மைதானத்தை பாராமரிக்க போதுமானது. இதனால் குடிநீரை பயன்படுத்தாமல், தண்ணீர் பிரச்சனையை எங்களால் சம்மாளிக்க முடியும் என்று மராட்டிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.

 

மும்பை மற்றும் புனேயில் நடைபெறும் 17 போட்டிகளில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரே பயன்படுத்தப்படும் என்று பி.பி.சி.ஐ. தெரிவித்து உள்ளது. இதற்கிடையே தகவல்களின்படி பஞ்சாப் அணியின் உரிமையாளர்கள் மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைபெறும் 3 போட்டிகளை மொகாலிக்கு மாற்றுவதற்கு சம்மதம் தெரிவித்து உள்ளனர் என்று பி.பி.சி.ஐ. கோர்ட்டில் தெரிவித்து உள்ளது. இவ்விவகாரத்தில் விதர்பா கிரிக்கெட் சங்கம் மற்றும் பஞ்சாப் உரிமையாளர்களை மனுதார்களை அணுக கேட்டுக் கொண்டு உள்ளது. மனுதாரர்கள் தரப்பில் 3 மணிக்கு பதில் அளிக்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top