ஐ.பி.எல். கிரிக்கெட்: குஜராத் லயன்ஸ் பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்

201604110747067033_IPL-Cricket-Gujarat-Lions-Punjab-team-today-clash_SECVPF9-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவின பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் லயன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ என்ற இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் மொகாலியில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் 3-வது லீக் ஆட்டத்தில் குஜராத் லயன்சும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், அதற்கு ஈடுகட்டும் வகையில் உருவாகிய இரண்டு அணிகளில் ஒன்று குஜராத் லயன்ஸ். சென்னை அணியில் ஆடிய முக்கியமான வீரர்கள் இந்த அணிக்கு எடுக்கப்பட்டுள்ளனர்.

குஜராத் அணியின் கேப்டனாக சுரேஷ் ரெய்னா இருக்கிறார். அதிரடி மன்னர்கள் பிரன்டன் மெக்கல்லம், வெய்ன் பிராவோ, ஜேம்ஸ் பவுல்க்னெர், வெய்ன் சுமித், ஆரோன் பிஞ்ச் மற்றும் ரவீந்திர ஜடேஜா, ஸ்டெயின், தினேஷ் கார்த்திக், பிரவீன்குமார், இந்திய ஜூனியர் அணியின் கேப்டன் இஷன் கிஷான் என்று குஜராத் அணி மிக வலுவாக காணப்படுகிறது. புதிய சீசனை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடந்த ஆண்டு 14 ஆட்டங்களில் 11-ல் தோற்று கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது. கடந்த ஆண்டு அணியை வழிநடத்திய ஜார்ஜ் பெய்லி கழற்றி விடப்பட்டு விட்டார். புதிய கேப்டனாக அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லர் (தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்) இருக்கிறார். மேக்ஸ்வெல், மிட்செல் ஜான்சன், ஷான் மார்ஷ், அக்ஷர் பட்டேல், மனன் வோரா, முரளிவிஜய், ஆல்-ரவுண்டர் குர்கீரத்சிங், ரிஷி தவான், விருத்திமான் சஹா, மொகித் ஷர்மா என்று பஞ்சாப் அணியிலும் திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் ஒருங்கிணைந்து விளையாடுவதை பொறுத்தே எழுச்சியை எதிர்பார்க்க முடியும். பஞ்சாப் அணிக்கு ஷேவாக் ஆலோசகராக இருப்பது சாதகமான அம்சமாகும்.

இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி மேக்ஸ், சோனி இ.எஸ்.பி.என். சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top