மும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்த தோனியின் ரைசிங் புனே சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி

201604092338473924_Rising-Pune-Supergiants-beats-Mumbai-Indians-by-9-wickets_SECVPF9–வது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழாவில் போட்டிகள் இன்று தொடங்கியது. மும்பையில் இரவு 8 மணிக்கு நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும்– புதிய அணியான ரைசிங் புனே சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக சிம்மன்ஸும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர். மும்பை அணி இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் ரோகித் சர்மாவின் விக்கெட்டை இழந்தது. பின்னர் சிம்மன்ஸ் 3.5 ஓவரில் 29 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 7 ரன்களிலும், சிம்மன்ஸ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் வீழ்ந்தன. பாண்டியா 9 ரன்களிலும், பட்லர் ரன் எதுவும் எடுக்காமலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். அதேபோல், பொல்லார்டு 1 ரன்னிலும், கோபால் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

68 ரன்களுக்குள் மும்பை அணி 7 விக்கெட்டுக்களை இழந்தது தடுமாறியது. கடைசி கட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராய்டு 22 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதிவரை நின்று ஹர்பஜன் சிங் போராடினார். அவர் 30 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். அதனால் மும்பை இண்டியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 121ரன்கள் எடுத்தது. புனே அணி தரப்பில் மார்ஸ், இசாந்த சர்மா தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

பின்னர் 122 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் புனே அணி களமிறங்கியது. ரகானேவும், டு பிளிஸ்சிஸும் தொடக்க வீரர்களாக களமிறங்கி சிறப்பான  ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் எடுத்தது. டு பிளிஸ்சிஸ் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து ரகானேவுடன் பீட்டர்சன் இணைந்தார். புனே அணி 14.4-வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.

ரகானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 42 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. கடையில் இறங்கி 2 சிக்ஸர்களை விளாசிய பீட்டர்சன் 14 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார்.

சென்னை அணியை விட்டு முதல் முதலாக தற்போதையை புனே அணியில் தோனி களமிறங்கினார். முதல் போட்டியிலேயே 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். நாளையை போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top