ரேபரேலி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

sonia gandhiஉத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மக்களவைத் தேர்தலுக்கான தனது வேட்பு மனுவினை சற்றுமுன் தாக்கல் செய்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சோனியா காந்தி ரேபரேலி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு இன்று அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுதாக்கல் செய்தார். தற்போது 4வது முறையாக இத்தொகுதியில் போட்டியிடும் சோனியா காந்தியை எதிர்த்து பா.ஜ.க வேட்பாளராக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அஜய் அகர்வால் போட்டியிடுகிறார்.

வேட்பு மனு தாக்கலுக்கு பின் பேட்டியளித்த சோனியா ரேபரேலி மக்கள் என்னை வெற்றி பெற வைப்பார்கள் என்று கூறினார். முன்னதாக சோனியா 1999வரை அமேதி தொகுதியில் போட்டியிட்டு வந்தார். ஆனால் 1999க்கு பிறகு சோனியா ரேபரேலி தொகுதியிலும் அவரது மகன் ராகுல் காந்தி அமேதி தொகுதியிலும் தொடர்ந்து போட்டியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top