முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பஞ்சாப் பல்கலைக் கழகத்துக்கு மீண்டும் ஆசிரியர் பணிக்குத் திரும்புகிறார்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பஞ்சாப் பல்கலைக் கழகத்துக்கு மீண்டும் ஆசிரியர் பணிக்குத் திரும்புகிறார். கடந்த 1954-ல் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்ற மன்மோகன் சிங், 1957-ல் அதே பல்கலைக்கழகத்தில் இளநிலை பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்.

சிறந்த பொருளாதார நிபுணராக விளங்கிய மன்மோகன் சிங், பின்னர் ஐ.நா. சபைப் பணி, ரிசர்வ் வங்கி ஆளுநர், நிதியமைச்சர் என படிப்படியாக உயர்ந்து 2004-ல் பிரதமராகப் பதவியேற்றார். 2014 வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் பிரதமராக இருந்த அவர், தற்போது மீண்டும் ஆசிரியர் பணிக்குத் திரும்ப உள்ளார்.

விரைவில் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக் கழகத்துக்கு செல்லும் மன்மோகன் சிங், மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார். பின்னர் டெல்லியில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்துவார் என்று பல்கலை துணைவேந்தர் அருண் குமார் குரோவர் தெரிவித்துள்ளார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top