பாஜகவுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லை: சோனியா காந்தி விமர்சனம்!

sonia gandhiஇந்திய அரசியல் சாசனத்தின் மீதோ, ஜனநாயகத்தின் மீதோ நம்பிக்கை இல்லாத கட்சி பாரதிய ஜனதா என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.

அஸ்ஸாம் மாநிலம் சாருகேட்ரி நகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய அவர் இதனைத் தெரிவித்தார். இதன் காரணமாகவே, காங்கிரஸ் ஆளும் உத்தரகாண்ட் மற்றும் அருணாசல பிரதேச மாநிலங்களில் அரசியல் சீர்குலைவை ஏற்படுத்த பாரதிய ஜனதா முயல்வதாகவும் சோனியா காந்தி குற்றம் சாட்டினார்.

வெளிநாடுகளுக்குச் செல்லும்போது பன்முகத்தன்மை கொண்டவராக தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும் பிரதமர் மோடி, உள்நாட்டில், வெறுப்பு அரசியலையே கையாண்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்துகொண்டு பாரதிய ஜனதா செய்து வரும் மதவாத அரசியல், நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து எனவும் சோனியா காந்தி குறிப்பிட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top