கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் மீண்டும் போட்டியிடக்கூடாது என்ற வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட்டு உத்தரவு

stalin 600சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் வக்கீல் ஆர்.பாலசுப்பிரமணியன். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற மே மாதம் நடைபெற உள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் வெற்றிப் பெற்றார். இந்த தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமி போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இதையடுத்து ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சைதை துரைசாமி தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த தேர்தல் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. எனவே, ஸ்டாலின், சைதை துரைசாமி ஆகியோர் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடக் கூடாது என்று உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் பாலசுப்பிரமணியன் ஆஜராகி வாதிட்டார். இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top