இலங்கையில் நடைபெறவிருந்த ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து

201604061514016031_Rahman-Colombo-concert-deferred_SECVPFஇந்தியாவை சேர்ந்த பத்துக்கும் அதிகமான பிரபல பின்னணி பாடகர்-பாடகியர் பங்கேற்கும் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை இலங்கை தலைநகர் கொழும்பு நகரில் வரும் 23-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இலங்கையில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடப்பது இதுவே முதல்முறை என்பதால் அந்நாட்டு மக்கள் இந்த நிகழ்ச்சியை காண மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர்.

இதற்கிடையில், கொத்துக் கொத்தாக தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மண்ணில் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடத்த கூடாது என்ற எதிர்ப்புக்குரல் தமிழ்கத்தில் எழுந்தது. குறிப்பாக, சென்னையில் உள்ள அவரது வீட்டை சுற்றிலும் பல்வேறு தமிழ் அமைப்பினர் இலங்கை இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

இந்நிலையில், வரும் 23-ம் தேதி நடைபெறுவதாக இருந்த ‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top