ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை மேலும் 2 மாதம் நீடிக்க மத்திய அரசு முடிவு

bd382d56-a080-409a-b719-8dd1193685d1_S_secvpfஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

சட்டமன்றத்தில் பதவி காலம் முடிய குறுகிய காலமே இருந்ததால் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமுல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் 10 மாவட்டங்கள் அடங்கிய தெலுங்கானா மாநிலம் ஜூன் 2–ந் தேதி உதயமானது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதி 119 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 30–ந் தேதி தேர்தல் நடக்கிறது.

சீமாந்திராவில் உள்ள 25 பாராளுமன்ற தொகுதி, 175 சட்டமன்ற தொகுதிகளுக்கு மே 7–ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இந்த நிலையில் முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி ராஜினாமாவை தொடர்ந்து 2 மாதத்துக்கு பிறப்பிக்கப்பட்ட ஜனாதிபதி ஆட்சி இந்த மாத இறுதியில் காலாவதியாகிறது. சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மே மாதம் 16–ந் தேதி நடக்க இருப்பதால் அதன்பிறகே புதிய அரசு அமையும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை மேலும் 2 மாதம் நீடிக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இதற்கான உத்தரவை விரைவில் ஜனாதிபதி பிறப்பிப்பார் எனத் தெரிகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top