கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 2 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வாக்குறுதிகளாக அரசியல் கட்சிகள் அறிவிக்க வேண்டும் என திருநங்கைகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருநங்கைகள நலச்சங்க 8 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற தேர்தல் கோரிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்குப் பின்னர் சங்கத்தின் மாவட்டத் தலைவர்கள் பூஜா (சேலம்), சத்யா (தேனி), ராஜி (தஞ்சை), சாந்தி (சென்னை) உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருநங்கைகள் பாலினத்தை சட் டபூர்வமாக்கி அனைத்து ஆவணங்களிலும் ‘மூன்றாம் பாலினம்’ என சேர்க்க வேண்டும். தமிழகத்தில் திருநங்கைகள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில், திருநங்கைகள் பொதுப் பிரிவில் உள்ளதால் இட ஒதுக்கீடு சாத்தியமில்லாத நிலை உள்ளது. எனவே, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 2 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
திருநங்கைகள் அரசியல் அங்கீகாரம் பெறும் வகையில் மக்களவை மற்றும் சட்டப்பேரவையில் நியமன உறுப்பினர் பதவி வழங்க வேண் டும். கேலி, கிண்டல் செய்யப்படு வதை தடுக்கும் வகையில் பெண் களுக்கான வன்கொடுமை சட்டத் தின் கீழ் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும். சொத்துரிமை சட்டம், குடும்ப வன்முறை சட்டம் உள் ளிட்ட பெண்களுக்கான சட்டப் பிரிவுகளில் திருநங்கைகளையும் சேர்க்க வேண்டும்.
திருநங்கைகள் நல வாரியத்தில் வழங்கப்படும் அடையாள அட் டையை அரசு ஆவணங்களின் அத் தாட்சியாக அங்கீகரிக்க வேண்டும். திருநங்கைகளின் திருமணத்தை சட்டபூர்வமாக்க வேண்டும்.
பெரு நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் திருநங்கை களுக்கான பாலின மாற்று அறுவை சிகிச்சை வசதி ஏற்படுத்த வேண் டும். தேசிய, மாநில அளவில் திரு நங்கைகள் கணக்கெடுப்பை முறைப்படுத்த வேண்டும். திருநங் கைகள் குறித்து பள்ளி, கல்லூரி களில் பாடத்திட்டம் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளைத் தேர்தல் வாக்குறுதிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் அறிவித்து நிறைவேற்றித் தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.